/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யானை தள்ளும் சிறப்பு கொண்ட தேர்
/
யானை தள்ளும் சிறப்பு கொண்ட தேர்
ADDED : ஏப் 16, 2025 11:47 PM
உடுமலை; மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், பக்தர்கள் முன்னே தேரின் வடம் பிடித்து இழுக்க, பின்னாலிருந்து திருத்தேரை யானை தள்ளும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி உடுமலையில் நடக்கிறது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், தேரோட்டத்தின் போது, யானை பயன்படுத்துவது, இக்கோவிலின் சிறப்பாக உள்ளது.
'ஊர் கூடி தேர் இழுக்கும்' நிகழ்ச்சியாக பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் தேரோட்டத்தின் போது, பக்தர்கள் முன்னால் தேர் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர்.
பின்னால், யானை தேரை தள்ளி பக்தர்களுக்கு உதவும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகவும், தமிழகத்தில் தேரோட்டத்தின்போது யானை பயன்படுத்தும் கோவில் என்ற சிறப்பும் உள்ளது.
தேர் திரும்பும் தளி ரோடு சந்திப்பு, குட்டை வீதி, சதாசிவம் வீதி, தலைகொண்டம் கோவில் திருப்பம், பொள்ளாச்சி ரோடு திருப்பம் உள்ளிட்ட தேர் திரும்பும் பகுதிகளில், யானையின் பங்கு பிரதானமாக உள்ளது.
இந்தாண்டு கேரள மாநிலம், பாலக்காடு செரபுலச்சேரியில் இருந்து மணிகண்டன் என்ற ஆண் யானை திருத்தேரோட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.