ADDED : டிச 29, 2024 07:28 AM

திருப்பூர்: திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், மாணவியரின் கலைத்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், கலையாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நுண்கலை போட்டிகள், குழுப்பாடல் மற்றும் தனிப்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவியரின் அறிவுசார்ந்த தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் அரங்கேறின. பாரம்பரிய பரதநாட்டிய போட்டியுடன் துவங்கிய மூன்றாம் நாளில், மாணவிகளின் கண்கவர் நடனம் மற்றும் குழு நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன.நிறைவு விழாவில், கல்லுாரி தலைவர் அர்த்தநாரீஸ்வரன், தலைமை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் வசந்தி, வரவேற்றார். லோகலட்சுமி கோபால், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். தமிழ்நாடு மின்வாரிய கோவை தணிக்கையாளர் சிவகுமார், திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் முத்துரத்தினம், திருப்பூர் குமரன் கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், உடற்கல்வி ஆசிரியை முருகேஸ்வரி, துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
கல்லுாரி மாணவர் பேரவை பொறுப்பாளர் பொன்மலர், நன்றி கூறினார். 'டிஸ்க் ஜாக்கி' சுந்தர், இசை ஒளிபரப்பினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மாணவியர் பேரவை தலைவி ராகவர்த்தினி, உறுப்பினர்கள் செய்திருந்தனர்.