/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருள் சூழ் நகரம் குற்றங்களுக்கு சாதகம்
/
இருள் சூழ் நகரம் குற்றங்களுக்கு சாதகம்
ADDED : அக் 19, 2024 11:56 PM

பல்லடம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்லடம் நகரப்பகுதி களைகட்டி வருகிறது. பொதுமக்கள் வந்து செல்வதால் பல்லடம் பஸ் ஸ்டாணட் எந்நேரமும் பரபரப்பாக காணப்படுகிறது.
பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து நிறைந்த பல்லடம் நகரப் பகுதியின் பெரும்பாலான இடங்களில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளன.
குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, பனப்பாளையம் உள்ளிட்ட போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த அனைத்து இடங்களிலும் உள்ள விளக்குகள் நீண்ட நாட்களாக எரிவதில்லை. தீபாவளி பண்டிகை காரணமாக, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
நகரப்பகுதி இரவில் சூழ்ந்து காணப்படுவதால், இது, சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமையக்கூடும். மேலும், விபத்து அபாயமும் உள்ளதால், நகரப் பகுதியை இருளின் பிடியிலிருந்து மீட்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.