/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாய் - தாத்தாவுக்கு கத்திக்குத்து: போதை வாலிபர் கொடூரம்
/
தாய் - தாத்தாவுக்கு கத்திக்குத்து: போதை வாலிபர் கொடூரம்
தாய் - தாத்தாவுக்கு கத்திக்குத்து: போதை வாலிபர் கொடூரம்
தாய் - தாத்தாவுக்கு கத்திக்குத்து: போதை வாலிபர் கொடூரம்
ADDED : அக் 16, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுாரை சேர்ந்த செல்வ கணேசன் மகன் மகாராஜா, 21; குடிப் பழக்கம் அதிகமானதால் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு அங்கிருந்து திரும்பி வந்துள்ளார். வீட்டில் மது அருந்திவிட்டு தனது தாய் முத்துமாரியம்மாள், 45 தாத்தா சுப்பையா, 65 ஆகியோருடன் தகராறு செய்துள்ளார்.
பின் போதையில் தாத்தாவையும், தாயையும் கத்தியால் குத்தினார். பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.