ADDED : அக் 16, 2025 05:56 AM

திருப்பூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட பேட்மின்டன் போட்டி, தாராபுரம் ரோடு, மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமியில் நேற்று நடந்தது.
விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், பிரன்ட்லைன் பள்ளி தாளாளர் சிவசாமி, மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமி பொறுப்பாளர் சுந்தரம் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் முதலிடம் பெற்ற, 71 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.14 வயது மாணவர் மற்றும் மாணவியர், 17 மற்றும், 19 வயது மாணவியர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய பிரிவுகளில், பிரன்ட்லைன் பள்ளி அணி முதலிடம் பெற்றது. 17 வயது மாணவர் ஒற்றையர் பிரிவில், ஸ்ரீனிவாசா வித்யாலயா (உடுமலை குறுமையம்) முதலிடம், இரட்டையர் பிரிவில், பிரன்ட்லைன் பள்ளி முதலிடம். 19 வயது மாணவர் ஒற்றையர் பிரிவில், எம்.எஸ்., வித்யாலயா பள்ளி (அவிநாசி குறுமையம்) முதலிடம், இரட்டையர் பிரிவில், பிரன்ட்லைன் பள்ளி முதலிடம் பெற்றது. முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.