/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெட்ட மனம் வராமல் மறுநடவு செய்த விவசாயி
/
வெட்ட மனம் வராமல் மறுநடவு செய்த விவசாயி
ADDED : ஜன 04, 2024 01:00 AM
பொங்கலுார்: திருப்பூர் நாச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்; விவசாயி. தோட்டத்தில் கட்டடம் கட்ட முடிவு செய்தார். தென்னை மரங்கள் அதற்கு இடையூறாக இருந்தது. அதை வெட்ட மனம் இல்லாமல், அவற்றை வேரோடு எடுத்துச் சென்று மறு நடவு செய்ய முடிவு செய்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அதில், 33 தென்னை மரங்களை இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து லாரியில் ஏற்றி அருகில் உள்ள தோட்டத்தில் மறு நடவு செய்தார். இதில் இரண்டு மரங்களைத் தவிர மீதம் உள்ள மரங்கள் காய்க்க ஆரம்பித்துள்ளது. மீதமிருந்த இருபது மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்து மறு நடவு செய்துள்ளார்.
சண்முகசுந்தரம் கூறுகையில், ''குடோன் கட்ட மரங்களை வெட்ட மனம் இல்லாமல் அருகில் உள்ள தோட்டத்தில் மறு நடவு செய்துள்ளோம். மொத்தம், 53 மரங்களை இதுவரை நடவு செய்துள்ளோம். ஏற்கனவே நட்ட இரண்டு மரங்கள் மட்டுமே பட்டு போனது. மீதமுள்ள மரங்கள் நன்றாகவே உள்ளது,'' என்றார்.