/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யலில் பாயும் வெள்ளம்; ஈஸ்வரன் கோவில் வீதி பாலம் மூடல்
/
நொய்யலில் பாயும் வெள்ளம்; ஈஸ்வரன் கோவில் வீதி பாலம் மூடல்
நொய்யலில் பாயும் வெள்ளம்; ஈஸ்வரன் கோவில் வீதி பாலம் மூடல்
நொய்யலில் பாயும் வெள்ளம்; ஈஸ்வரன் கோவில் வீதி பாலம் மூடல்
ADDED : நவ 05, 2024 11:28 PM

திருப்பூர்; ஈஸ்வரன் கோவில் வீதி பாலத்தில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை, பரவலாக பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கழிவுநீர் பாய்ந்து கொண்டிருந்த ஆற்றில், புதுவெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால், நேற்று கூடுதலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வருவாய்த்துறை சார்பில், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நொய்யல் வெள்ளத்தால், ஈஸ்வரன் கோவில் வீதி பாலத்தில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நொய்யல் பாலம் கட்டுமான பணிக்காக, பழைய பாலம் நிரந்தரமாக மூடவும் ஆலோசனை நடந்துள்ளது. திடீரென ஈஸ்வரன் கோவில் வீதி பாலம் நேற்று மூடப்பட்டதால், யுனிவர்சல் ரோடு, மின்மயான ரோடுகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈஸ்வரன் கோவில் வீதி பாலம் மூடப்பட்டால், ஊத்துக்குளி ரோடு வழியாக வரும் கனரக வாகனங்களில், நொய்யல் கரையோரமாக வர தடைவிதிக்க வேண்டும். அவ்வழியாக வரும் கனரக வாகனங்கள், டவுன்ஹால் சென்று, குமரன் ரோடு வழியாக செல்லும் வகையில், போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும்.