/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிக்கு பிரத்யேக ஆய்வகம் வேண்டும்!
/
அரசு பள்ளிக்கு பிரத்யேக ஆய்வகம் வேண்டும்!
ADDED : செப் 19, 2024 06:23 AM

பல்லடம் : பல்லடம் அரசு ஆண்கள் பள்ளிக்கு என, பிரத்யேக ஆய்வக கட்டடம் இல்லாததால், மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பல்லடம், மங்கலம் ரோட்டில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 500 மாணவர்கள் படிக்கின்றனர். பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வகங்கள் அவசியம்.
ஆனால், இப்பள்ளியில் பிரத்யேக ஆய்வக வசதி இல்லாததால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இடம் பிரிக்கப்பட்டு, அதில், அரசு கல்லுாரி கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால், அரசு கல்லுாரிக்கு பிரத்யேக சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது. இந்த கல்லூரி வளாகத்துக்குள் தான், அரசு பள்ளியின் ஆய்வகம் அமைந்துள்ளது. மாணவர்கள் ஆய்வகத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், கல்லூரி வளாகத்துக்குள் வர வேண்டும் என்ற நிலை உள்ளது.
இதனால், தேவையற்ற குழப்பம் ஏற்படுவதுடன், கல்லூரி சுதந்திரமாக செயல்படுவதும் கேள்விக்குறியாகிறது.
இதனால், அரசு பள்ளி மாணவர்கள் ஆய்வகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் நகராட்சியில் கோரிக்கை மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.