/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வசமான வாய்ப்பு; சாத்தியமான சாதனை
/
வசமான வாய்ப்பு; சாத்தியமான சாதனை
ADDED : ஏப் 12, 2025 11:14 PM

வாய்ப்பு கிடைத்ததும், அதை சாதகமாக்கி, கால்பந்து விளையாட்டில் தங்களை பட்டை தீட்டி, நேபாளம் வரை சென்று, தேசிய அளவிலான போட்டியில் பங்கெடுத்து திரும்பியிருக்கின்றனர், திருப்பூரைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் சிலர்.
திருப்பூர் தக்ஷா ஸ்போர்ட் கிளப் அகாடமி மற்றும் அவெஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கராத்தே மற்றும் கால்பந்து பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், பயிற்சி பெற்றவர்கள் தான், தேசிய அளவிலான போட்டியில் விளையாடி திரும்பியிருக்கின்றனர்.
இதில், 12 வயதுக்குட்பட்ட கராத்தே போட்டியில், வீர் ராதாகிருஷ்ணன், தியாக்ஷ்மி ஆகியோர் தங்கம் வென்றனர். கால்பந்து, 12 வயது பிரிவில், வருண், சாய், ஆர்வின், ஆத்விக், பிரஜான்; 17 வயது பிரிவில் பிரித்வின், ஜீவா, புகழ், கம்பன், டேவிட், சபரி; சீனியர் பிரிவில் மோகன், அஜய், அஷ்வந்த், அருண், ரீகன், தக்ஷணாமூர்த்தி; பெண்கள் பிரிவில் சாதனா, பிருந்தா, அகிலா, மோனிகா, ஹர்ஷினி, யாழினி, காயத்ரி ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர்.
இதில், 12 வயது, சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெள்ளி பதக்கம், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
பயிற்சியாளர்களாக ஹரிஹரசுதன் (தக்ஷா ஸ்போர்ட்ஸ் கிளப்), அருண்பிரகாஷ் (அவெஞ்சர்ஸ் ஸ்போர்ட் அகாடமி) ஆகியோர் செயல் பட்டனர்.
அவர்கள் கூறுகையில், ''திருப்பூர் செங்கப்பள்ளியில் நடந்த மாவட்ட அளவில், மாநில அளவில் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தான், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.
ஒலிம்பிக் முறையில், 'மல்டி கேம்ஸ்' எனப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஐவர் கால்பந்தில், இந்திய அணி சார்பில் பங்கேற்று திருப்பூர் மாணவர்கள் சாதித்தனர்,'' என்றனர்.

