/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில் தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்
/
கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில் தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்
கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில் தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்
கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில் தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம்
ADDED : ஆக 03, 2025 11:46 PM

திருப்பூர்:
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட் டது. கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை 220வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. தீரன் சின்னமலைக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில், நேற்று, திருப்பூர், காங்கயம்ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில் நடந்தது.
தீரன் சின்னமலை படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் துாவியும் மரியாதை ெலுத்தப்பட்டது. கட்சியின் மாநில தலைவர் கொங்கு முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் கொங்கு ராஜாமணி, கவுரவ தலைவர் சரண்யா முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாநில பொருளாளர் ஜியோ செல்வராஜ் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ராமசாமி நன்றி கூறினார். இதில், 'ஜெயசித்ரா' சண்முகம், கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின் கட்சி சார்பில் ஏராளமான வாகனங்களில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஓடாநிலை புறப்பட்டுச் சென்றனர். அங்கு தீரன் சின்னமலை நினைவிடத்தில் அவரது படத்துக்கு மலர் துாவி அவர்கள் மரியாதை செலுத்தினர்.