/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாழையை ருசிக்க வந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு
/
வாழையை ருசிக்க வந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு
ADDED : ஜன 16, 2025 05:45 AM
வால்பாறை, : வால்பாறை அடுத்துள்ள வறட்டுப்பாறை, பன்னிமேடு, நல்லமுடிபூஞ்சோலை, தாய்முடி,கெஜமுடி, வில்லோனி, சோலையாறு உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள சவராங்காடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றையானை முகாமிட்டுள்ளது.பகல் நேரத்தில் தேயிலை காட்டை ஒட்டியுள்ள துண்டு சோலையில் முகாமிடும் யானை, இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட வாழைகளை உட்கொள்கிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு, 8:30 மணிக்கு சவராங்காடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட ஒற்றையானை, வால்பாறை நகர் கக்கன்காலனி பகுதியில் முகாமிட்டது.
உத்திரகாளியம்மன் கோவில் தடுப்பை சேதப்படுத்தி யானை, குடியிருப்பு பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகளை ருசிக்க சென்றது. சப்தம் கோட்ட இப்பகுதி மக்கள் யானையை, அங்கிருந்து விரட்டினர்.