/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை தொழில்முனைவோராகலாம் உருவாகிறது வழிகாட்டி மையம்
/
பின்னலாடை தொழில்முனைவோராகலாம் உருவாகிறது வழிகாட்டி மையம்
பின்னலாடை தொழில்முனைவோராகலாம் உருவாகிறது வழிகாட்டி மையம்
பின்னலாடை தொழில்முனைவோராகலாம் உருவாகிறது வழிகாட்டி மையம்
ADDED : ஆக 02, 2025 11:19 PM
திருப்பூர்: பின்னலாடை தொழிலில் கால்பதித்துள்ள தொழில்முனைவோருக்கு வழிகாட்டவும், புதிய தொழில்முனைவோர் உருவாகுவதை ஊக்குவிக்கவும், 'மூன்றாவது கண்' என்ற வழிகாட்டி மையம் திருப்பூரில் துவங்கப்பட உள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, பருத்தி நுாலிழையை ஆதாரமாக கொண்டு இயங்கி வருகிறது. சர்வதேச சந்தை வாய்ப்புகளை கூடுதலாக பெற, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை ஏற்றுமதியாளர்களும் நன்குணர்ந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகள் முன், பெயர் அளவுக்கு வந்த பாலியஸ்டர் பின்னல் துணிகளுக்கு வரவேற்பு இல்லை. பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தி என்பது உச்சநிலையை அடைந்துவிட்டது; அதே அளவுக்கு, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை உயர்த்த வேண்டியதும், திருப்பூரின் அடுத்த குறிக்கோளாக மாறிவிட்டது.
தைவான், சீனா உட்பட நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பாலியஸ்டர் பின்னல் துணி, வடமாநிலங்களில் உற்பத்தியாகும் சாயமிடப்பட்ட பாலியஸ்டர் பின்னல் துணி, திருப்பூரில் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. துணியை வாங்கினால், உடனே வெட்டி தைக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஒரே கூரையின் கீழ்...
திருப்பூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், புதிய தொழில்முனைவோராக வருவது அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆடை வடிவமைப்பு (டிசைனிங்), துணி 'கட்டிங்', ஆடை தைப்பது, பிரின்டிங், எம்ப்ராய்டரிங் என, பல்வேறு பிரிவுகளை கடந்துவர வேண்டியுள்ளது. தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் வகையில், திருப்பூரில் 'மூன்றாவது கண்' என்ற வழிகாட்டி மையம் அமைக்க, 'யெஸ் இந்தியா கேன்' அமைப்பு களமிறங்கியுள்ளது.
தொழில் அமைப்புகள் மற்றும் 'வால்ரஸ்', 'மேகலா மெஷின்ஸ்' போன்ற முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி மையம் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. ஆடை தயாரிப்புக்கான 'பேட்டர்ன்' தயாரிப்பது, டிசைன் செய்வது துவங்கி, 'பேப்ரிக்' துணியை 'கட்டிங்' செய்வது, ஆடை வடிவமைப்பு, பிரின்டிங், எம்ப்ராய்டரிங், பேக்கிங் என, அனைத்து பணிகளையும், ஒரே கூரையின் கீழ் மேற்கொள்ளலாம். தற்போதைய நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கான, 'சாம்பிள்' தயாரிப்பதற்கும், இத்தகைய மையம் உறுதுணையாக இருக்கும்.