/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடையூறு பல கடந்து இயங்கும் இயற்கை சந்தை
/
இடையூறு பல கடந்து இயங்கும் இயற்கை சந்தை
ADDED : மார் 10, 2024 12:34 AM

பல்லடம்:பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதி இயற்கை விவசாயிகள் இணைந்து, பல்லடம் பனப்பாளையத்தில், 'சிவன் இயற்கை சந்தை' எனும் விற்பனை அங்காடியை துவக்கி கடந்த ஓராண்டாக நடத்தி வருகின்றனர்.
இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இயற்கை சந்தையை வேறு இடத்திலும் கொண்டு செல்ல இடம் தேடி வந்த நிலையில், விவசாயி பழனிசாமி மற்றும் இவரது குடும்பத்தினர், கொச்சி ரோட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான, 50 சென்ட் இடத்தை இலவச பயன்பாட்டுக்கு வழங்க முன்வந்தனர்.
நிலம் கிடைத்த சந்தோஷத்தில் இருந்த விவசாயிகள், ஷெட் அமைக்க நிதி திரட்ட முடியாமல், தற்போது, தொழிலாளர்களாக மாறி ஷெட் அமைக்கும் பணியில் தாங்களே ஈடுபட்டுள்ளனர். இவர்களின் சிரமத்தை பார்த்த பழனிசாமி குடும்பத்தினர், தங்களிடம் இருந்த சிமென்ட் ஷீட்டுகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு வழங்கியுள்ளனர்.
இவ்வாறு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, இடத்தை விவசாயிகளுக்கு வழங்கியதுடன் ஷெட் அமைக்கவும் உதவிய விவசாய குடும்பத்துக்கு இயற்கை விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

