/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடுகளைக் குதறிய வெறி நாய் கூட்டம்
/
ஆடுகளைக் குதறிய வெறி நாய் கூட்டம்
ADDED : டிச 14, 2024 11:42 PM

பொங்கலுார்: படியூரில், 13 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறின.
படியூரை சேர்ந்தவர் குருமூர்த்தி, 45. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். தோட்டத்தில் ஆடுகளை மேய விட்டிருந்தார்.
நேற்று இவரது தோட்டத்தில் புகுந்த வெறி நாய்கள், 13 ஆடுகளை கடித்து குதறின. வருவாய்துறையினர், கால்நடைத்துறையினருக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''இப்பகுதி வானம் பார்த்த பூமியாகும். பயிர் சாகுபடி செய்வதற்கு போதுமான நீர் வளம் இல்லை. எங்களின் வாழ்வாதாரத்திற்காக செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறோம்.
அவ்வப்பொழுது நாய்கள் கடித்து ஆடுகளைக் கொன்று விடுவதால் எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருகிறது.
வெறி நாய்களை கூண்டு வைத்து பிடிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து போன ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'' என்றனர்.