/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லட்சம் மக்கள் வசித்தும் 'கரையேறாத' ஊராட்சி
/
லட்சம் மக்கள் வசித்தும் 'கரையேறாத' ஊராட்சி
ADDED : பிப் 12, 2025 12:20 AM
பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஊராட்சியாக கரைப்புதுார் உள்ளது. நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தாலும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஏனோ, ஊராட்சியை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இந்த ஊராட்சி திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்ற பேச்சு எழுந்த நிலையில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சமீபத்தில் வெளியான பட்டியலில், கரைப்புதுார் இல்லாததால், மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், ஊராட்சி பகுதியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, கரைப்புதுார் ஊராட்சியை தரம் உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.
அடிப்படை வசதிகள் இவ்வாறு பின்தங்கி இருக்க, அடிக்கடி நடக்கும் திருட்டு, வழிப்பறி, தொழிலாளர் போர்வையில் வந்து செல்லும் சமூக விரோதிகள் என, மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. இதற்காகவே, இப்பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வைக்கப்பட்டு வருகிறது. கரைப்புதுார் ஊராட்சியை தரம் உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.