/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருட வந்து கிணற்றில் விழுந்த நபர்
/
திருட வந்து கிணற்றில் விழுந்த நபர்
ADDED : நவ 02, 2024 02:54 AM
திருப்பூர்:காங்கயம், தளஞ்சிக்காட்டுப் புதுாரைச் சேர்ந்தவர் சுப்புக்குட்டி, 60. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டைப் பூட்டி விட்டு, வெளியே துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரம் நாய் குரைத்த சத்தம் கேட்டு எழுந்து பார்த்தார். அப்போது வீட்டுக் கதவை ஒரு மர்ம நபர் உடைக்க முயற்சிப்பது தெரிந்தது.
இதனை பார்த்து அவர் சத்தம் போட, அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனைப்பார்த்த அந்நபர் தப்பினார். இந்நிலையில், நேற்று காலை சுப்புகுட்டி வீட்டருகே கிணற்றிலிருந்து யாரோ சத்தம் போடவே, பொதுமக்கள் எட்டிப் பார்த்தனர்.
ஒருவர் காயமடைந்த நிலையில் இருப்பது தெரிந்தது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து போலீசாரின் விசாரணையில், அந்நபர் நாமக்கல்லை சேர்ந்த சக்திவேல், 42 என்பதும், சுப்புக்குட்டி வீட்டில் திருட வந்தபோது, பொதுமக்கள் துரத்தியதில், கிணற்றில் விழுந்ததும் தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.