/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவித்ததோ மறியல்; நடந்ததோ ஆர்ப்பாட்டம்
/
அறிவித்ததோ மறியல்; நடந்ததோ ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2025 10:17 PM

திருப்பூர்; தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, காலமுறை ஊதியம், குறைந்தபட்சம், 6,750 ரூபாய், குறைந்தபட்ச ஓய்வூதியம், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், சத்துணவு ஊழியருக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், நேற்று மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.
நேற்று காலை, 10:00 மணி முதல், கலெக்டர் அலுவலகம் முன்பு கூடியிருந்தனர். போராட்டம் துவங்க தாமதம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.
போராட்டத்துக்கு வந்தவர்கள், ரோட்டில் அமர்ந்து மறியல் செய்வதை தடுக்கும் வகையில், சுற்றி வளைத்து நின்றனர். எதிர்பார்த்த கூட்டம் சேராததால், போராட்ட ஏற்பாட்டாளர்களே, போலீசாரிடம் பேசி, ஆர்ப்பாட்டமாக மாற்றிவிட்டனர்.
'மறியல் செய்யவில்லை... ஆர்ப்பாட்டத்துடன் முடித்துக்கொள்கிறோம்... கைது செய்ய வேண்டாம்' என்று கூறி, கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி சென்றனர்.
தங்கள் வேலை குறைந்தது என, போலீசாரும் நிம்மதியுடன் புறப்பட்டு சென்றனர்.