/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பலிவாங்க காத்திருக்கும் சாலையோர கிணறு
/
பலிவாங்க காத்திருக்கும் சாலையோர கிணறு
ADDED : மே 26, 2025 06:08 AM

திருப்பூர்; தாராபுரம் நெடுஞ்சாலையில், ரோட்டோரம் பாதுகாப்பில்லாத நிலையில் உள்ள கிணறு, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
அவிநாசிபாளையம் - திருப்பூர் இடையே டோல் கேட்டுக்கு அருகில், ரோட்டின் இடதுபுறத்தில் ரோட்டோரம் திறந்த நிலையில் பெரிய கிணறு உள்ளது. விவசாயப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த கிணறு தற்போது ரோடு அகலப்படுத்திய நிலையில் நெடுஞ்சாலை ரோட்டை ஒட்டிய பகுதியாக மாறி விட்டது. கிணறு இருப்பது குறித்து எந்த எச்சரிக்கை அறிவிப்பும் இல்லை. மேலும் திறந்த நிலையில் காணப்படும் கிணற்றைச் சுற்றி எந்த பாதுகாப்பு அமைப்பும் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
தினமும் பல்லாயிரம் வாகனங்கள் சென்று வரும் ரோடு. உள்ளூர் வாசிகள் தவிர வெளி மாவட்டத்தினர் அதிகளவில் பயன்படுத்தும் இந்த ரோட்டில் இந்த இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள ரோட்டோர கிணறு குறித்து அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதனால், விபத்துகள், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த சிலநாள் முன், சாத்தான்குளம் பகுதியில் இது போல் ரோட்டோரத்தில் இருந்த கிணற்றில் கார் பாய்ந்து ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவம் நடந்தது. இதுபோன்ற அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன், கிணற்றின் அருகே எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.