/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டாலர் சிட்டி'யில் கால்பதித்த 'ரோபோ'
/
'டாலர் சிட்டி'யில் கால்பதித்த 'ரோபோ'
ADDED : ஜூலை 18, 2025 11:35 PM

திருப்பூர்; திருப்பூர் பின்னலாடை தொழிலில், மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தியில், 'பிரின்டிங்' தொழில்நுட்பம் அத்தியாவசிமானது. குறிப்பாக, ஏற்றுமதி ஆடை வடிவமைப்பிலும் உயர் வரவேற்பை பெற்றுள்ளது.
'ஸ்கிரீன் பிரின்டிங்', டிஜிட்டல் பிரின்டிங் என, நவீன இயந்திரங்களுடன், பிரின்டிங் தொழில் நவீனமாகியுள்ளது. அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்களை, திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர் இருந்தால் மட்டுமே இயக்க முடியும்.
தானியங்கி 'ரோபா' தயாரித்து, பிரின்டிங் துறையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, பிரின்டிங் தொழிலில் பயன்படுத்தும் வகையிலான, 'ரோபா' வடி வமைக்கப்பட்டுள்ளது; திருப்பூரில் சோதனை ஓட்டமும் வெற்றியடைந்துள்ளது.
இது குறித்து, திருப்பூர் 'நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன்' (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது: பின்னலாடை பிரின்டிங் நிறுவனங்களில், 'ரோபோ' பயன்பாடு சாத்தியமாகப்போகிறது. தொழிலாளர் பற்றாக்குறையை இதன் வாயிலாக சரிக்கட்ட முடியும். முதல்கட்டமாக, பனியன் பீஸ்களை மெஷினில் இருந்து எடுத்து வைக்கும் (அன் லோடிங்) 'ரோபோ' வடிவமைத்துள்ளோம். கோவையில் உள்ள, 'ரெட்ரோ' என்ற நிறுவனத்தினர், இதற்கான 'ரோபோ' வடிவமைத்து கொடுத்துள்ளனர். திருப்பூர் பிரின்டிங் நிறுவனத்தில், சோதனை முறையில் இயக்கி சரிபார்க்கப்பட்டது. விரைவில், மற்ற பணிகளுக்கும் 'ரோபா' தயார் செய்யப்படும். தொழிலாளர், தினமும் ஒன்று அல்லது 1.50 'ஷிப்ட்' மட்டுமே பணியாற்ற முடியும்.
'ரோபா' இயந்திரங்கள் வந்தால், ஏற்றுமதி நிறுவனங்களின் அவசர தேவைக்கு உதவும் வகையில், இரவு, பகலாக பிரின்டிங் சேவையை வழங்க முடியும். திருப்பூரில் அடுத்த மாதம் நடக்க உள்ள, 'நிட்ேஷா' கண்காட்சியில், இந்த 'ரோபோ' அறிமுகம் செய்யப்படும் இவ்வாறு, அவர் கூறினார்.