/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான 'பின்னலாடை நகரம்'
/
பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான 'பின்னலாடை நகரம்'
பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான 'பின்னலாடை நகரம்'
பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான 'பின்னலாடை நகரம்'
ADDED : ஆக 23, 2025 11:53 PM

''தி ருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிவோரில், 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள்தான். பெண் தொழிலாளருக்கு பாதுகாப்பான நகராக திருப்பூர் விளங்குகிறது'' என்று புதுடில்லியில் நடந்த தேசிய கருத்தரங்கில், ஏற்றுமதியாளர் சங்க இணைச்செயலாளர் குமார் துரைசாமி கூறினார்.
இந்தியாவின் பருத்தி, ஜவுளி, தேயிலை மற்றும் மசாலா தானிய உற்பத்தியில், பாலின பொறுப்புடன் கூடிய உற்பத்தி சங்கிலி உருவாக்கம் குறித்த, தேசிய அளவிலான கருத்தரங்கு, புதுடில்லியில் நடந்தது.
ஐக்கிய நாடுகளின் பெண்கள் பிரிவு, ஜெர்மனி அரசின் ஜி.ஐ.இசட்., மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில், 'பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்கான கூட்டு முயற்சி' என்ற தலைப்பில் நடந்த இக்கருத்தரங்கில், மத்திய அரசின் பெண்கள் மேம்பாடு துறை செயலர் அமீர் மாலிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
19 மாநில பெண்கள் பணிபுரியும் திருப்பூர் இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், திருப்பூர் தொழில் வளம் காப்போர் கூட்டமைப்பு சார்பில் பங்கேற்ற, இணைச்செயலாளர் குமார் துரைசாமி நம்முடன் பகிர்ந்தவை: திருப்பூர் பின்னலாடைத் தொழிலில், 65 சதவீத்துக்கும் அதிகமான பெண்கள் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் உள்ள, 19 மாநில பெண் தொழிலாளர் திருப்பூரில் பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பான தங்குமிடம், உணவு, சுகாதார வசதி அளிக்கப்படுகிறது. பின்னலாடை நிறுவனங்களில், புகார் கமிட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும், பெண்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர் குழந்தைகள், திருப்பூரிலேயே பயில, தமிழக அரசு உதவியுடன், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கெதிரான குற்றம் பூஜ்ஜியமாக்க முனைப்பு பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழில் நகரங்களை சேர்ந்தவர்களும், திருப்பூர் நேரில் வந்து, பெண் தொழிலாளர் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்க்கலாம். பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பான நகராக திருப்பூர் விளங்குகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை பூஜ்ஜியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறித்தும், விரிவாக விளக்கினோம். பல்வேறு தொழில் நகரங்களை சேர்ந்த பிரதிநிதிகள், மத்திய அரசு அதிகாரிகள் திருப்பூர் வந்து, பெண் தொழிலாளர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்த்து, தேவையான ஆலோசனைகளையும் வழங்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கூறினார்.