/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பில்லாத பள்ளி மைதானம் மேம்படுத்தினால் சிறப்பு
/
பராமரிப்பில்லாத பள்ளி மைதானம் மேம்படுத்தினால் சிறப்பு
பராமரிப்பில்லாத பள்ளி மைதானம் மேம்படுத்தினால் சிறப்பு
பராமரிப்பில்லாத பள்ளி மைதானம் மேம்படுத்தினால் சிறப்பு
ADDED : செப் 22, 2024 11:45 PM
உடுமலை : உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான மைதானம் ஒன்றிய அலுவலகத்தின் எதிரில், 7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
முன்பு சுற்றுச்சுவர் இல்லாமல், மைதானத்தில் பல்வேறு அத்துமீறல்கள் நடந்து வந்தது. இதையடுத்து சோமவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், 'நமக்கு நாமே' திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதியின் கீழ், நுழைவாயில் பகுதியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
மறுபகுதியில், முழுமையாக சுற்றுச்சுவர் இல்லை. தற்போது இம்மைதானத்தை, சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள், நடைபயிற்சி செய்யும் இடமாகவும், இளைஞர்கள் கிரிக்கெட், வாலிபால் பயிற்சி பெற்றும் வருகின்றனர்.
இந்நிலையில் இரவு நேரங்களில், அத்துமீறி மைதானத்துக்குள் நுழைபவர்கள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மது அருந்திவிட்டு, காலி மதுபாட்டில்களை அனைத்து பகுதிகளிலும் வீசிச்சென்று விடுகின்றனர்.
இதனால், காலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பதிக்கப்படுகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் தனிச்சிறப்பு பெற்றுள்ளனர்.
அவர்கள் பயிற்சி பெறும் வகையில், மைதானத்தை மேம்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக மைதானத்தை மேம்படுத்த வேண்டும். பள்ளி நிர்வாகம் சார்பில், இரவு காவலர் நியமித்து, சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.