/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
15 ஆண்டுகளாக தொடர் கதை... 20 ஆண்டாக போராடும் தாய்
/
15 ஆண்டுகளாக தொடர் கதை... 20 ஆண்டாக போராடும் தாய்
ADDED : நவ 19, 2024 06:37 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், வண்டல் மண் எடுப்பதற்கு வழங்கப்படும் அனுமதியை பயன்படுத்தி, கிராவல் மண் எடுப்பதாக அ.தி.மு.க.,வினர் புகார் கூறுகின்றனர். கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி, கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
தாராபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் பாலகுமாரன் தலைமையில், அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:
தாராபுரம் தாலுகாவில், அரசு அனுமதி அளித்துள்ள எந்த ஒரு குளம், ஓடை வெட்டியிலும் வண்டல் மண், களிமண் இல்லை. வருவாய்த்துறை அதிகாரிகள், குளத்தை பார்வையிடாமலேயே, விண்ணப்பிப்போருக்கு உடனடியாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கி விடுகின்றனர். தாராபுரத்திலுள்ள அனைத்து ஓடைகளிலும் கிராவல் மண் உள்ளது. வண்டல் மண் எடுப்பதற்காக வழங்கப்படும் அனுமதி சீட்டை வைத்துக்கொண்டு, கிராவல் கடத்துகின்றனர்.
அனுமதியின்றி கனிமவளங்கள் வெட்டி எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனாலும், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், இரவு நேரங்களில் கனிமவள கடத்தல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும், வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், குளங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையிலும், குளங்களில் மண் அள்ளுவதற்கு தாராபுரம் தாசில்தார் அனுமதி அளித்துள்ளார். குளங்களின் வண்டல் மண் உள்ளதா என பரிசோதித்த பின்னரே, அனுமதி வழங்க வேண்டும். கனிமவளங்களை சுரண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்; மண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளார். கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால், பல போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

