/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூருக்கு வந்த 'லண்டன் பிரிட்ஜ்' :குட்டீஸ்களுடன் கொண்டாட ஒரு ஷாப்பிங்
/
திருப்பூருக்கு வந்த 'லண்டன் பிரிட்ஜ்' :குட்டீஸ்களுடன் கொண்டாட ஒரு ஷாப்பிங்
திருப்பூருக்கு வந்த 'லண்டன் பிரிட்ஜ்' :குட்டீஸ்களுடன் கொண்டாட ஒரு ஷாப்பிங்
திருப்பூருக்கு வந்த 'லண்டன் பிரிட்ஜ்' :குட்டீஸ்களுடன் கொண்டாட ஒரு ஷாப்பிங்
ADDED : ஜன 06, 2024 11:54 PM
உழைப்பாளிகளின் நகரமாகிய திருப்பூரில், பொழுதுபோக்கு அம்சங்கள் என்றால், விரல் விட்டு கூட எண்ண முடியாது. ஆனால், சில நிகழ்வுகள், திருப்பூர்வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது என்றே சொல்லலாம். அவ்வகையில், திருப்பூர், காங்கயம் ரோடு, பத்மினி கார்டனில் 'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி நடந்து வருகிறது.
இது குறித்து, பொருட்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு சேர ஷாப்பிங் வந்து செல்லும் வகையிலான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் முதல் வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கிச் செல்ல அரிதாக கிடைக்கும் வாய்ப்பு. வெறுமனே ஷாப்பிங் மட்டுமல்ல; ஏராளமான பொழுது போக்குகளுக்கும் பஞ்சமில்லை.
குழந்தைகள் குதுாகலமடையும் வகையில், பேய் வீடு, 3 டி போன்ற திகிலுாட்டும் விளையாட்டு முதல், ராட்டினம், டோரா டோரா போன்ற சிரிப்பூட்டும் விளையாட்டு வரை, ஏராளமான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள 'போட்டோ ஸ்பாட்'கள், வந்து செல்வோரை வசீகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
பசியாறவும், ருசி பார்க்கவும் டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பானிபூரி என, தென்னிந்திய, வட இந்திய உணவு களும் தயாரித்து, வழங்கப்படுகின்றன. பொங்கல், குடியரசு தின விடுமுறையில், இப்பொருட்காட்சியில் மாலை நேரத்தில் ஜாலியாக பொழுது போக்கலாம். தினமும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை பொருட்காட்சி நடக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.