/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காக மாறும் குட்டை திடல்; வேதனையில் மக்கள்
/
குப்பை கிடங்காக மாறும் குட்டை திடல்; வேதனையில் மக்கள்
குப்பை கிடங்காக மாறும் குட்டை திடல்; வேதனையில் மக்கள்
குப்பை கிடங்காக மாறும் குட்டை திடல்; வேதனையில் மக்கள்
ADDED : ஆக 01, 2025 07:23 PM

உடுமலை; வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்ட குட்டைத்திடல், தற்போது படிப்படியாக, குப்பை கிடங்காக மாற்றப்பட்டு வருவது சமூக ஆர்வலர்களை வேதனையடைய செய்துள்ளது.
உடுமலை தளி ரோட்டில், தற்போது, 0.91 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே இந்த குட்டை உள்ளது. முன்பு, ஏழு குள பாசன திட்ட கசிவு நீர் தேக்கி வைக்கப்படும் முக்கிய நீர்நிலையாக இந்த குட்டை இருந்தது.
நகர வளர்ச்சியால், பல்வேறு தேவைகளுக்காக இந்த குட்டையை மேடாக்கி, மைதானமாக மாற்றினர். பின்னர், அரசியல் கட்சி கூட்டம் நடத்தவும், திருவிழாவின் போது, கேளிக்கை விளையாட்டுகள் நடைபெறும் இடமாகவும் குட்டை மாறியது.
மேலும், தளி ரோட்டில் நெரிசலை குறைக்க, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த குட்டையில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது; மேற்குப்பகுதியில், விபத்து மற்றும் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
இப்படி படிப்படியாக சுருங்கிய குட்டையின் ஒரு பகுதி, குப்பை மேடாக மாற்றப்பட்டு வருகிறது. நகராட்சி வணிக வளாகம் மற்றும் மணி மண்டபத்தின் பின்பகுதியில் கட்டட மற்றும் மண் கழிவுகளை குவித்து வைத்துள்ளனர்.
அவ்விடம் திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, இது முற்றிலுமாக சுருங்கி, காணாமல் போய் வருகிறது. ஆண்டுதோறும் குட்டைத்திடலில், கேளிக்கை விளையாட்டு சாதனங்கள் அமைக்க வருவாய்த்துறையினர் ஏலம் விடுகின்றனர்.
இதனால் கணிசமான வருவாய் அத்துறைக்கு கிடைத்தாலும், குட்டையை பாதுகாக்கவும், சீரமைக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
உடுமலை நகரின் பிரதான அடையாளமாக இருந்த இது, ஒற்றையடி பாதை அளவுக்கு சுருங்கி வருவது மக்களை வேதனையடையச்செய்துள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர், குப்பைக்கிடங்காகும் குட்டையை மீட்டு, பாதுகாக்க வேண்டும். குப்பை கொட்டுவதை தடுத்து, சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தால், அப்பகுதியை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.