/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காக மாறும் மழைநீர் ஓடை; ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கணும்
/
குப்பை கிடங்காக மாறும் மழைநீர் ஓடை; ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கணும்
குப்பை கிடங்காக மாறும் மழைநீர் ஓடை; ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கணும்
குப்பை கிடங்காக மாறும் மழைநீர் ஓடை; ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கணும்
ADDED : அக் 09, 2024 10:20 PM

உடுமலை : உடுமலை அருகே மலையாண்டிபட்டணத்தில், குப்பைக்கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தாமல் நீர்வழிதடத்தில் எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துகிறது.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட குரல்குட்டை ஊராட்சியில், மலையாண்டிபட்டணம் கிராமம் உள்ளது. இங்கு இருநுாறுக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
வீடுதோறும் குப்பைக்கழிவுகளை சேகரிப்பதற்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளது. ஆனால் அவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக உரமாக்குவதற்கும், மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், பயன்படுத்தும் வகையில் ஊராட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும்.
ஆனால், குரல்குட்டை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை, மலையாண்டிபட்டணத்தில் உள்ள மழைநீர் ஓடையில் மொத்தமாக கொட்டி தீ வைத்து விடுகின்றனர்.
இவ்வாறு மழைநீர் ஓடை கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. இதனால் நாள்தோறும் காலை நேரத்தில் கழிவுகளிலிருந்து புகை அதிகமாக பரவுகிறது.
இறந்தவர்களுக்கான இறுதிச்சடங்கு செய்வதற்கான இடமும் அருகில் உள்ளது. அந்த இடத்தையும் பயன்படுத்த முடியாத வகையில், கழிவுகள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது.
ஊராட்சிகளின் குடியிருப்பு பகுதிகளை துாய்மையாக மாற்றுவதற்கு, நீர்வழி பாதைகளை மோசமாக்கும் வகையில், இந்த நடவடிக்கை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு இல்லாமல், கழிவுகளை அப்பகுதியில் கொட்டுகின்றனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், குப்பைக்கழிவுகளை உரமாக்கும் செயல்பாட்டிற்கு ஊராட்சி நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இவ்வாறு கழிவுகளை நீர்வழி ஓடைகளில் கொட்டுவதற்கும், ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.