/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டின் மையத்தில் திடீர் பள்ளம்
/
ரோட்டின் மையத்தில் திடீர் பள்ளம்
ADDED : பிப் 14, 2024 11:43 PM

திருப்பூர் மாநகராட்சி, 26வது வார்டு கொங்கணகிரி பகுதியில், இரு இடங்களில் நேற்று முன்தினம் திடீரென இரு இடங்களில் பெரிய குழி ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். வார்டு கவுன்சிலர் குணசேகரன், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
அதிகாரிகளின் ஆய்வில், அப்பகுதியில் உள்ள தொட்டியிலிருந்து 4 வது திட்டத்தில் குடிநீர் வினியோகம் துவங்கிய போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறியது தெரிந்தது. அதிகளவில் நீர் பாய்ந்த நிலையில், தார் ரோடு, பெயர்ந்து குழி ஏற்பட்டது தெரிந்தது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'குழாய் உடைப்பால் அதிகளவில் நீர் வெளியேறி இக்குழிகள் ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு, சாலை உடனே சீரமைக்கப்படும்,' என்றனர்.

