/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்டையை நிரப்பி கட்டிய சுங்க சாவடி; இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவு
/
குட்டையை நிரப்பி கட்டிய சுங்க சாவடி; இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவு
குட்டையை நிரப்பி கட்டிய சுங்க சாவடி; இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவு
குட்டையை நிரப்பி கட்டிய சுங்க சாவடி; இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவு
ADDED : நவ 13, 2024 11:24 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், அவிநாசி - அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், வேலம்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இது நீர் நிலை குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால், அதை அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலக அரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் பேச்சு நேற்று நடந்தது. எஸ்.பி., அபிஷேக் குப்தா, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாயிகள் பங்கேற்றனர்.
கலெக்டர் கூறுகையில், ''ஐகோர்ட் உத்தரவுப்படி, நீர் நிலை ஆக்கிரமிப்பில் உள்ள சுங்கச்சாவடி கட்டடங்கள் உடனடியாக அகற்றப்படும். ஆக்கிரமிப்பு அகற்றியபின், சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வரும்.
''விவசாயிகள் மற்றும் திருப்பூர் பதிவு எண் கொண்ட உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணம் என்ற விவசாய சங்கங்களின் கோரிக்கை குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனரிடம் பேசி வருகிறோம்,'' என்றார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன்முருகசாமி கூறுகையில், ''எங்கள் ஒரு கோரிக்கை நிறைவேறியதால், போராட்டத்தை கைவிடுகிறோம். சுங்கச்சாவடியை முழுமையாக ரத்து செய்ய, தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.