/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஏஐ' தொழில்நுட்பத்துக்கு ஏகோபித்த வரவேற்பு
/
'ஏஐ' தொழில்நுட்பத்துக்கு ஏகோபித்த வரவேற்பு
ADDED : மார் 08, 2026 05:59 AM

திருப்பூர்: 'நிட்டெக் -2026' கண்காட்சியில், திருப்பூரின் முன்னணி பின்னலாடை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பார்வையிட்டு, புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
ைஹடெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர் நிறுவனம் சார்பில், 18வது 'நிட்டெக்' கண்காட்சி, திருமுருகன்பூண்டி 'ைஹடெக்' கண்காட்சி வளாகத்தில் நடந்து வருகிறது. 350க்கும் அதிகமான ஸ்டால்களில், 270க்கும் அதிகமான மெஷின்கள், பாதுகாப்பு தளவாடங்கள், உற்பத்திக்கான உப பொருட்கள், அசசரீஸ், நிறுவன பயன்பாட்டுக்கான தளவடாங்கள் என, காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நிட்டிங்' மெஷின், சாய ஆலைகளுக்கான 'சாப்ட்புளோ' மெஷின்கள், காம்பாக்டிங், பிரின்டிங், எம்பிராய்டரிங், மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கான இயந்திரங்கள், ஆடை வடிவமைப்புக்கான வகை வகையான இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியில் உள்ள ஒவ்வொரு வகையான இயந்திரங்களிலும், 'ஏஐ' தொழில்நுட்பமும், 'ரோபோ' தொழில்நுட்பமும் இடம் பெற்றுள்ளன.
'ஏஐ சென்சார்' என்ற கூடுதல் இணைப்பால், உற்பத்தியின் போது உருவாகும் தவறுகள் உடனுக்குடன் கண்டறிந்து, சரிசெய்யப்படுகின்றன. டிஜிட்டல் பிரின்டிங் இயந்திரத்திலேயே, துணியில் பிரின்ட் ஆனதும், அதனை தணிக்கை செய்து உடனுக்குடன் வழங்கும் தொழில்நுட்பமும் வந்துள்ளன.
கண்காட்சியின், 2வது நாளான நேற்று திருப்பூரில் இயங்கும் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பார்வையிட்டு, ஒவ்வொரு ஸ்டால்களில் உள்ள சிறப்பான புது இயந்திரங்கள், அதில் இணைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
துவங்கிய இரண்டாவது நாளிலேயே, பெரும்பாலான ஸ்டால்களில், 'விற்கப்பட்டது' என்ற பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் விசாரிக்கும் போது, மெஷின்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்து செல்வதும் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான ஸ்டால்களில், 'விற்கப்பட்டது' என்ற பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் நேரில் வந்து விசாரிக்கும் போது, புதிய தொழில்நுட்பங்களை அறிந்து உடனுக்குடன், மெஷின்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் ஏற்படுத்துவதும் அதிகரித்துள்ளது
'நிட்டெக்- 2026' கண்காட்சியில், 'ஏஐ' தொழில்நுட்பமும், தானியங்கி 'ரோபோ' தொழில்நுட்பமும் அதிகம் இடம்பெற்றுள்ளன. இதனால், மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 'திருப்பூர் பின்னலாடை தொழிலில் 'சஸ்டெய்னபிலிட்டி' என்ற தலைப்பில், வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி குறித்து விவாதிக்கப்பட்டது. சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட தலைவர் சுனில்குமார், டெக்ஸ்டைல் கமிட்டி முன்னாள் உதவி இயக்குனர் பெரியசாமி, 'டீ' சங்க இணை செயலாளர் ஆனந்த் பங்கேற்று, பசுமை சார் உற்பத்தி வழிமுறை குறித்தும் கலந்தாய்வு நடத்தினர். 'நிட்டெக் -2026' தொழில் வளர்ச்சிக்கு, சரியான வழிகாட்டி.
- சிபி சக்கரவர்த்தி: 'நிட்டெக்'இணை நிர்வாக இயக்குனர்:

