/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அரசியல் வேறுபாடு இன்றி ஒன்றுபட்ட குரல் தேவை'
/
'அரசியல் வேறுபாடு இன்றி ஒன்றுபட்ட குரல் தேவை'
ADDED : ஏப் 25, 2025 07:58 AM
திருப்பூர்; தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம், இந்தியாவையே மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
கடந்தமுறை காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தீவிரவாதிகள் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு, அரசியல் பாதைக்கு திரும்பவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
பாகிஸ்தானிலிருந்து ஏவப்படும் தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீரில் உள்ள பொதுமக்களை பழிவாங்குவது, துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்வது மனிதத் தன்மையற்ற செயல். அரசியல் வேறுபாடுகளை களைந்து, நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டும்.

