
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; அனுப்பர்பாளையம் திலகர் நகரில், ஸ்ரீ அம்ச விநாயகர், ஸ்ரீ சாந்த கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், 15ம் ஆண்டு பொங்கல் விழா 10ம் தேதி துவங்கியது.
இதில், நேற்று ஸ்ரீ பொட்டுசாமி பொங்கல் வைத்தல், சலங்கை ஆட்டம், வான வேடிக்கையுடன் மாவிளக்கு எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை ஆகியவை நடந்தது. இன்று, ஸ்ரீ சாந்தகருப்பராய சுவாமி பொங்கல், உச்சி பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது.
அனுப்பர்பாளையம், தண்ணீர்பந்தல் காலனியில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ கன்னிமூல மஹாகணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ ஆதிபராசக்தி, ஸ்ரீ கருப்பராயன் சுவாமி கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இன்று கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன் சுவாமிகளுக்கு பொங்கல், நாளை மஞ்சர் நீர் அபிஷேகம் நடக்கிறது.