sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆடிக்கிருத்திகை கோலாகல கொண்டாட்டம்

/

ஆடிக்கிருத்திகை கோலாகல கொண்டாட்டம்

ஆடிக்கிருத்திகை கோலாகல கொண்டாட்டம்

ஆடிக்கிருத்திகை கோலாகல கொண்டாட்டம்


ADDED : ஆக 16, 2025 11:10 PM

Google News

ADDED : ஆக 16, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

ஆடி மாதத்தில், இரண்டு முறை கிருத்திகை நட்சத்திரம் வந்தது; இரண்டாவது முறையாக கிருத்திகை நட்சத்திரம் வந்திருந்ததால், நேற்று, ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஷண்முகசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, மகா அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம், திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன.

 வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில், சுவாமிக்கு மகா அபிேஷகமும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. செவ்வரளி மாலைகளை அணிந்து, வள்ளி, தெய்வானை சமேதராக, கல்யாண சுப்பிரமணியர் அருள்பாலித்தார்.

 ஆடிக்கிருத்திகையான நேற்று, மூர்த்தி நாயனார் மற்றும் புகழ்சோழ நாயனார் குருபூஜை நடந்தது. சிவாச்சார்யார்கள் அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் செய்தனர். அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் மன்றத்தினர், திருவாசகம் மற்றும் தேவார பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர்; தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us