/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கக்கன் திறந்துவைத்த 'ஆவின்' குளிரூட்டு நிலையம் மூடல்
/
கக்கன் திறந்துவைத்த 'ஆவின்' குளிரூட்டு நிலையம் மூடல்
கக்கன் திறந்துவைத்த 'ஆவின்' குளிரூட்டு நிலையம் மூடல்
கக்கன் திறந்துவைத்த 'ஆவின்' குளிரூட்டு நிலையம் மூடல்
ADDED : பிப் 06, 2024 01:50 AM

பல்லடம்;சுல்தான்பேட்டையில், முன்னாள் அமைச்சர் கக்கன் திறந்து வைத்த ஆவின் பால் குளிரூட்டு நிலையம், பால் வரத்து குறைவு காரணமாக மூடப்பட்டது.
கோவை மாவட்டம், சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டையில் 'ஆவின்' நிறுவனம் சார்பில், பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த, 1963ம் ஆண்டு, காமராஜர் முதல்வராக இருந்தபோது, அப்போதைய அமைச்சர் கக்கன் திறந்து வைத்தார். தற்போது இது மூடப்பட்டுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத 'ஆவின்' அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் பெரிய குளிரூட்டு நிலையங்களில் ஒன்றாக இது விளங்கியது. ஆவின் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு 33 முதல் 40 ரூபாய் வரை தரத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், 40 ரூபாய்க்கு மேல் வழங்குவதால், பெரும்பாலான விவசாயிகள், ஆவினுக்கு வழங்குவதை நிறுத்தி விட்டனர்.
இங்கு, 40 ஆயிரம் லிட்டர் வரை குளிரூட்டும் வசதி உள்ளது. பால் வரத்து, தினசரி, 8 ஆயிரம் லிட்டர் ஆக குறைந்தது. குறைவான பாலை குளிரூட்ட கூடுதல் செலவாகும் என்பதால், 'ஆவின்' உத்தரவுப்படி, தற்காலிகமாக நிலையம் மூடப்பட்டது. இங்குள்ள ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்'' என்றார்.