sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அப்துல் கலாம் சுழற்கோப்பை 'பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி

/

அப்துல் கலாம் சுழற்கோப்பை 'பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி

அப்துல் கலாம் சுழற்கோப்பை 'பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி

அப்துல் கலாம் சுழற்கோப்பை 'பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி


ADDED : ஆக 06, 2025 12:34 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பனியன் நிறுவன ஊழியர்கள் பங்கேற்கும் 'அப்துல் கலாம் சுழற்கோப்பைக்கான, 'பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி, வரும் 9ம் தேதி 'நிப்ட்-டீ' கல்லுாரி மைதானத்தில் துவங்குகிறது.

தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 'நிப்ட்-டீ' கல்லுாரி நிர்வாகம், ஆண்டுதோறும், கிரிக்கெட் போட்டி நடத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், பின்னலாடை நிறுவனங்களின் அணிகள், முறையான பயிற்சி பெற்று, சிறப்பாக விளையாடி, திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 'நிப்ட்-டீ' கல்லுாரி நிர்வா கம், 'டெக்னோ ஸ்போர்ட்' சார்பில், 'அப்துல் கலாம் சுழற்கோப்பை'க்கான, 7வது 'நிப்ட்-டீ பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி, நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில், வரும், 9ம் தேதி துவங்குகிறது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 20 பின்னலாடை உற்பத்தி நிறுவன அணிகள் பங்கேற்கின்றன. முதலில், 15 ஓவர்களுடன், 'லீக்' போட்டியும்; காலிறுதி போட்டி முதல், 20 ஓவர்களுடன் 'நாக்-அவுட்' முறையிலும், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.

ஒவ்வொரு வாரமும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டிகள் நடக்கும். 'லீக்', காலிறுதி, அரை இறுதி போட்டிகளை தொடர்ந்து, வரும் நவ., 9ம் தேதி, இறுதிப்போட்டி நடக்கும். கிரிக்கெட் தொடரில், முதலிடம் பெறும் அணிக்கு, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் அப்துல் கலாம் சுழற்கோப்பை வழங்கப்படும்.

போட்டியில், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுக்கோப்பை, மூன்று மற்றும் நான்காமிடம் பிடிக்கும் அணிகளுக்கு பரிசுக்கோப்பை, வழங்கப்பட உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை, 'நிப்ட்-டீ' கல்லுாரி நிர்வாகம் செய்து வருகிறது.






      Dinamalar
      Follow us