/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சிலை மீண்டும் அகற்றம்; தாலுகா ஆபீசில் 'தஞ்சம்'
/
விநாயகர் சிலை மீண்டும் அகற்றம்; தாலுகா ஆபீசில் 'தஞ்சம்'
விநாயகர் சிலை மீண்டும் அகற்றம்; தாலுகா ஆபீசில் 'தஞ்சம்'
விநாயகர் சிலை மீண்டும் அகற்றம்; தாலுகா ஆபீசில் 'தஞ்சம்'
ADDED : ஆக 06, 2025 12:35 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகேயுள்ள பெருமாள்மலையில் சிலர், ரோட்டோரம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் முறையான அனுமதியின்றி விநாயகர் கோவில் கட்ட வேலை செய்தனர்.
இதையடுத்து அங்கு சிலை வைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு துறையில் மனு அளித்தனர். இதையடுத்து சம்பத்தப்பட்ட இடம் வருவாய்த்துறையினரால் அளவீடு செய்யப்பட்டு, அது மலைகுன்று பகுதி என வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
இதனால், வருவாய்த் துறையினரால் அனுமதி யின்றி எந்த பணியும் செய்யக்கூடாது என தெரிவித்தனர். கடந்த 18ம் தேதி இரு தரப்பினருடனும் சுமூக பேச்சு நடத்தப்பட்டது. முடிவு எட்டப்படாத நிலையில் ஒரு தரப்பினர் விநாயகர் சிலையை கடந்த 31ம் தேதி புறம்போக்கு இடத்தில் வைத்தனர். இதற்கு, மற்றொரு தரப்பினர் அவ்விடத்தில் கோவில் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
தாசில்தார் மோகனன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், ஆர்.ஐ விதுர்வேந்தன் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகள் கிரேன் மூலம் பாதுகாப்பாக எடுத்து மாற்று இடத்தில் வைக்கப்பட்டது.
மீண்டும் அகற்றம் இச்சூழலில், அரசு இடத்தில் அனுமதியின்றி சிலைகள் ஏதும் வைக்ககூடாது, இதனால் பல்வேறு சட்ட பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
நேற்று காலை தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ்ராஜா தலைமையில், கிரேன் வாயிலாக, சிலைகள் பாதுகப்பாக அகற்றப்பட்டு, காங்கயம் தாலுகா அலுவகத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.