ADDED : ஆக 06, 2025 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் போலீசாருக்கு கட்டுப்பட்ட காங்கயம் சப்-டிவிஷனில் டி.எஸ்.பி., யாக இருந்த மாயவன், சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், தாலுகா ஸ்டேஷனில் பயிற்சி எஸ்.பி.,யாக இருந்த அர்பிட்ட ராஜ்புட் காங்கயம், ஏ.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
நேற்று அவர் காங்கயத்தில் பொறுப்பேற்று கொண்டார். டி.எஸ்.பி., அந்தஸ்தில் பார்த்து வந்த சப்-டிவிஷனுக்கு, முதன் முறையாக ஏ.எஸ்.பி., அந்தஸ்தில் அதிகாரிநியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.