/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழிப்பறி வழக்கில் அப்பீல் மனு தள்ளுபடி
/
வழிப்பறி வழக்கில் அப்பீல் மனு தள்ளுபடி
ADDED : ஆக 06, 2025 12:35 AM
திருப்பூர்; நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராமநாதன் - தேன்மொழி. கடந்த 2021ல் தம்பதியர் 11.12 லட்சம் ரூபாய் பணத்துடன் டூவீலரில் சென்றனர். அப்போது ஒருவர் பணப்பையைப் பறித்து தப்பினார். அனுப்பர்பாளையம் போலீசார் தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த அருண்குமாரை, 25, கைது செய்து, பணத்தை மீட்டனர்.
இவ்வழக்கில், ஜே.எம். எண்: 2 கோர்ட்டில், அருண்குமாருக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் மீது, திருப்பூர் எஸ்.சி.,/எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில், அருண்குமார் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை நீதிபதி சுரேஷ் தள்ளுபடி செய்தார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.