/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமிக்கு கருக்கலைப்பு மேலும் ஒருவர் கைது
/
சிறுமிக்கு கருக்கலைப்பு மேலும் ஒருவர் கைது
ADDED : ஜன 11, 2024 10:47 PM
திருப்பூர்:திருப்பூர் அருகே, 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட வழக்கில், மேலும், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65, விவசாயி. இவர், 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமி கர்ப்பமானார். பின், தாராபுரம் அரசு மருத்துவமனை செவிலியர் உஷாராணி, 52, என்பவர் உதவியோடு, சிறுமியின் கருவை கலைத்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். புகாரின்படி, 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் ராஜேந்திரன், உஷாராணி ஆகியோரை தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் தொடர்புடைய ஆதித்தமிழர் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், 52, என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர், சிறுமியின் கருக்கலைப்புக்கு உதவியாக இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.