UPDATED : அக் 08, 2026 06:08 PM
ADDED : அக் 08, 2026 06:06 PM
திருப்பூர்: பூலுவப்பட்டி ஏ.பி.எஸ். அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள், திருப்பூர் வடக்கு குறுமைய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர்.
மூத்தோர் (மாணவர்): பிரவீன்குமார் (800 மீ - முதல் இடம்; 400 மீ, 1500மீ - 2ம் இடம்), யோகேஷ் (100 மீ, 200 மீ - 2ம் இடம்), ஆதிகேசவன்நாராயணன் (400மீ - 3ம் இடம்). 4×400 மீ தொடரோட்டத்தில் பிரவீன்குமார், விகாஸ், சபரீஷ், ஆதிகேசவன்நாராயணன் (2ம் இடம்). குருபிரசாத் (குண்டெறிதல், வட்டெறிதல் - முதல் இடம்).
மிக மூத்தோர் (மாணவர்): இந்திரஜித் கிருஷ்ணா (800 மீ, 1500 மீ, 3000 மீ - 1ம் இடம் பெற்று தனிநபர் கேடயம் வென்றார்). தரணீஷ் (300மீ - 2ம் இடம்), தீபக் (800மீ - 2ம் இடம்). 4×400மீ தொடரோட்டத்தில் தீபக், தரணீஷ், சஞ்சீவ், இந்திரஜித் கிருஷ்ணா (3ம் இடம்).
மாணவிகள்: யாழினி (சதுரங்கம் - 1ம் இடம்), நந்திகா (குண்டெறிதல் - 1ம் இடம்), தீபிகா (800மீ - 1ம் இடம்; ஈட்டியெறிதல் - 3ம் இடம்), ஷிவானி (வட்டெறிதல் - 2ம் இடம்; குண்டெறிதல் - 3ம் இடம்), சஞ்சனா (3000மீ - 2ம் இடம்), மயூரிகா (குண்டெறிதல் - 2ம் இடம்).
தடகளத்தில் ஒட்டுமொத்தமாக பள்ளி 2ம் இடம் பிடித்தது.
குழுப் போட்டிகள்: ஹாக்கி (மாணவிகள்): இளையோர், மிக மூத்தோர் (1ம் இடம்), மூத்தோர் (2ம் இடம்).
எறிப்பந்து (மாணவர்கள்): இளையோர், மூத்தோர் (2ம் இடம்).
வெற்றி பெற்றவர்களை பள்ளித் தலைவர் பட்டுலிங்கம், தாளாளர் சரவணக்குமார், முதல்வர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
வடக்கு குறுமையப் போட்டிகளில் சாதனை படைத்த பூலுவப்பட்டி ஏ.பி.எஸ். அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்.
