/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணுகுசாலை பணிகள் துவக்கம்; வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி
/
அணுகுசாலை பணிகள் துவக்கம்; வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி
அணுகுசாலை பணிகள் துவக்கம்; வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி
அணுகுசாலை பணிகள் துவக்கம்; வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 08, 2025 08:56 PM

உடுமலை; உடுமலை அருகே, நான்கு வழிச்சாலையில் இழுபறியாக இருந்த, அணுகுசாலை பணிகள் துவங்கியுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள், கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், உடுமலை பகுதியில் சில பணிகள் மட்டும் நீண்ட காலமாக இழுபறியாக உள்ளது.
குறிப்பாக, பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை சந்திப்பு பகுதிகளில், உயர்மட்ட பாலம் கட்டும் பணி, ஓராண்டுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே போல், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையுடன் இணையும், அணுகுசாலை அமைக்கும் பணியும் இழுபறியாக இருந்தது. நான்கு வழிச்சாலையில், போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் மட்டும் மண் மேடாக இருந்தது.
மழைக்காலத்தில் அவ்வழியாக செல்ல முடியாமல், அனைத்து வாகன ஓட்டுநர்களும் திணறி வந்தனர். நீண்ட இழுபறிக்குப்பிறகு தற்போது, அணுகுசாலை மேம்படுத்தப்பட்டு, தார்ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.