/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடுத்தடுத்து விபத்து; 'வழுவழு' ரோடால் ஆபத்து
/
அடுத்தடுத்து விபத்து; 'வழுவழு' ரோடால் ஆபத்து
ADDED : ஜூலை 17, 2025 10:51 PM

திருப்பூர்; திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையத்தில் சென்டர் மீடியனில் மோதி, அடுத்தடுத்து வந்த அரசு பஸ்கள் விபத்துக்குள்ளானது.
திருப்பூர், தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையத்தில் வளைவில் அடிக்கடி விபத்து நடப்பது தொடர்கதையாக உள்ளது. அந்த குறிப்பிட்ட இடத்தில் ரோடு 'வழுவழு' என இருப்பதால் விபத்து நடந்து வருகிறது. இரவு நேரங்களில் தெருவிளக்கும் எரியாமல் இருள் சூழ்ந்து இருக்கிறது. சம்பந்தப்பட்ட இடத்தில் விபத்து ஏற்படாமல், ரோட்டை சீரமைப்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் கிளம்பி திருப்பூர் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்ற அரசு பஸ்சும், திருச்செந்துாரில் இருந்து கோபிக்கு திருப்பூர் வழியாக சென்ற அரசு பஸ்சும் நேற்று அதிகாலை, 5:30 மணியளவில் கே.செட்டிபாளையம் வளைவில் டிரைவர்களின் கட்டுப்பாட்டை மீறி, சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த பழனிசாமி என்பவர் காயமடைந்தார். எனவே, விபத்து அபாயம் உள்ள ரோட்டை சரி செய்து, தடுப்பு நடவடிக்கையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்.