/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு
ADDED : அக் 30, 2024 12:16 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மக்கள் அதிகம் கூடும் பிரதான இடங்களில் காலை, மாலை நேரங்களில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி வருகின்றனர்.
பட்டாசு வெடிக்கும் போது செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னவென்று, பட்டாசு வெடிக்கும் போது அருகே பக்கெட்டில் நீர் வைத்து கொள்வது, எளிதில் தீ பிடிக்கும் உடைகளை அணிய வேண்டாம் பல்வேறு அறிவுரைகள் இடம் பெற்றுள்ளது.
மேலும், அனைத்து தீயணைப்பு நிலையத்திலும், வாகனங்கள், வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பட்டாசு வெடிக்கும் போது ஏதாவது தீ விபத்து போன்றவை ஏற்பட்டால், உடனே விரைந்து செல்லவும், அணைக்கவும் என, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் குடியிருப்பு பகுதியில் ரோந்தில் ஈடுபட உள்ளனர், என தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.