/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி பைபாஸ் ரோட்டில் தொடரும் விபத்து! நடவடிக்கை எடுக்காவிடில் காத்திருக்கிறது ஆபத்து
/
அவிநாசி பைபாஸ் ரோட்டில் தொடரும் விபத்து! நடவடிக்கை எடுக்காவிடில் காத்திருக்கிறது ஆபத்து
அவிநாசி பைபாஸ் ரோட்டில் தொடரும் விபத்து! நடவடிக்கை எடுக்காவிடில் காத்திருக்கிறது ஆபத்து
அவிநாசி பைபாஸ் ரோட்டில் தொடரும் விபத்து! நடவடிக்கை எடுக்காவிடில் காத்திருக்கிறது ஆபத்து
ADDED : மே 20, 2025 12:45 AM

அவிநாசி; அவிநாசி வழியே செல்லும் பைபாஸ் ரோட்டில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கேரள மாநிலத்திலிருந்து கோவை, ஈரோடு, சேலம் வழியாக சென்னைக்கும், ஒசூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கும் செல்வதற்கு பயன்படும் சேலம் - கொச்சி பைபாஸ் சாலை அவிநாசி நகரை ஒட்டி அமைந்துள்ளது. பைபாஸ் ரோட்டில் நாள்தோறும் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
அதிலும் செங்கப்பள்ளி துவங்கி கணியூர் டோல்கேட் வரை அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. பைபாஸ் சாலையை ஒட்டி உள்ள சர்வீஸ் ரோட்டில் அருகே அமைந்துள்ள பெரிய நிறுவனங்களுக்காக சரக்குகள் மற்றும் வேலையாட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் சர்வீஸ் ரோட்டிலேயே நிறுத்தப்படுகிறது. சர்வீஸ் ரோட்டில் இருந்து பைபாஸ் சாலைக்குச் செல்லும் வாகனங்களும், பைபாஸ் சாலையிலிருந்து சர்வீஸ் ரோட்டிற்கு திரும்பும் வாகனங்களும் எதிரெதிரே மோதி விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அவிநாசி போலீஸ் எல்லையான தெக்கலுார் அருகே உள்ள கல்லாங்காடு பகுதி வரை கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் போலீசாரால் பொருத்தப்படவில்லை. அந்தப் பகுதியில் கொரோனா தொற்று சமயத்தில் செயல்பட்ட சோதனை சாவடிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. அதன் எதிரில், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடியும் செயல்படுவதில்லை.
'சிசிடிவி' கேமராக்கள் ஒரு சில கடைகளில் இருந்தாலும் அவை பைபாஸ் ரோட்டில் விபத்துகள் ஏற்பட்டால் கண்காணிப்பு செய்யும் அளவில் பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக பைபாஸ் ரோட்டில் நள்ளிரவில் விபத்துகள் ஏற்பட்டால்,விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். 'பேட்ரால்' போலீசார் உரிய நேரங்களில் மணிக்கு ஒரு முறை குறிப்பிட்ட துாரம் வரை சர்வீஸ் ரோட்டிலும், பைபாஸ் ரோட்டிலும் ஆய்வுக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செய்யாமல் சரக்கு வாகனங்களையும், ஆம்னி பஸ்களை நிறுத்தியும் 'வசூல்' செய்வது என வேலையாக இருக்கின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக பெருமாநல்லுாரில் இருந்து கணியூர் டோல்கேட் வரை பிரபலமான பெரிய மில்கள், ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், உணவுப் பொருள் தயாரிப்பு கம்பெனிகள், ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளன. இந்நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களை அவரவர் வாகன பார்க்கிங்கில் நிறுத்தச் சொல்ல அறிவுறுத்துவதில்லை.
சர்வீஸ் ரோட்டிலேயே வாகன ஓட்டிகள் நிறுத்திச் செல்வதால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படுகிறது. விபத்து அதிகம் நடக்கும் பகுதியில் மற்றும் வணிக நிறுவனங்களோ கடைகளோ இல்லாத பகுதியில் ஏற்படும் விபத்துகளை கண்காணிக்க போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ரோந்து போலீசார் தொடர் சுழற்சி முறையில் சர்வீஸ் ரோட்டிலும் பைபாஸ் சாலையிலும் ரோந்து பணியை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
ரோந்து போலீசார் உரிய நேரங்களில் மணிக்கு ஒரு முறை குறிப்பிட்ட துாரம் வரை சர்வீஸ் ரோட்டிலும், பைபாஸ் ரோட்டிலும் ஆய்வுக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செய்யாமல் மாடுகள் ஏற்றி கேரளாவுக்கு செல்லும் வாகனங்களையும், ஆம்னி பஸ்களையும் நிறுத்தியும் 'வசூல்' செய்வது என வேலையாக இருக்கின்றனர்