/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரைமட்ட பாலத்தில் பள்ளம் அதிகரித்து வரும் விபத்துகள்
/
தரைமட்ட பாலத்தில் பள்ளம் அதிகரித்து வரும் விபத்துகள்
தரைமட்ட பாலத்தில் பள்ளம் அதிகரித்து வரும் விபத்துகள்
தரைமட்ட பாலத்தில் பள்ளம் அதிகரித்து வரும் விபத்துகள்
ADDED : ஏப் 21, 2025 09:30 PM

உடுமலை; உடுமலை அரசுப்பள்ளி அருகிலுள்ள, தரைமட்ட பாலத்தின் ஓரத்தில் பள்ளமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, மழைநீர் வடிகால் மேல் போடப்பட்ட தரைமட்ட பாலம் ஒன்று உள்ளது. பள்ளி மாணவியர், தளி ரோட்டுக்கு செல்வோரும், இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.
பாலத்தின் ஓரத்தில் பாதி வரை பள்ளமாக உள்ளது. முறையான தடுப்புகளும் அமைக்கப்படவில்லை.
இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்திருப்பதால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டுநர்கள் மற்ற வாகனத்துக்கு வழி விடுவதற்கு சிறிது ஒதுங்கினாலும், விபத்துக்குள்ளாகும் ஆபத்தான நிலை தான் உள்ளது.
சைக்கிள்களில் செல்லும் சிறுவர்கள், அடிக்கடி அந்த பள்ளத்தில் வாகனங்களை விட்டு விபத்துக்குள்ளாகின்றனர். பள்ளத்தை சீரமைப்பதற்கும், முறையான தடுப்பு அமைப்பதற்கும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.