/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாட்டுப்பண்ணை தொழிலுக்கு கடன் மறுப்பு ; 'தாட்கோ' மீது குற்றச்சாட்டு
/
மாட்டுப்பண்ணை தொழிலுக்கு கடன் மறுப்பு ; 'தாட்கோ' மீது குற்றச்சாட்டு
மாட்டுப்பண்ணை தொழிலுக்கு கடன் மறுப்பு ; 'தாட்கோ' மீது குற்றச்சாட்டு
மாட்டுப்பண்ணை தொழிலுக்கு கடன் மறுப்பு ; 'தாட்கோ' மீது குற்றச்சாட்டு
ADDED : டிச 20, 2024 04:18 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட 'தாட்கோ' நிறுவனத்தில் விவசாயம் சார்ந்த மாட்டுப் பண்ணை தொழிலுக்கு கடன் மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
'தாட்கோ' திட்டப் பயனாளிகள் கூறியதாவது: பட்டியல் இன மக்கள் பயனடையும் வகையில் தாட்கோ நிறுவனம் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில், 80 சதவீதம் பேர், குறு விவசாயிகளாகவும், விவசாய கூலி தொழிலாளர்களாகவும் விவசாய தொழில் சார்ந்து வாழ்கின்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இவர்கள் பொருளாதாரம் மேம்பட விவசாயம் சார்ந்த, மாட்டு பண்ணை துவங்க மானியக் கடன் வழங்கப்பட்டது. வேறு எந்த கடனும் வழங்கப்படுவதில்லை. விவசாயம் சாராத தொழிலுக்கு மட்டுமே 'தாட்கோ'வில் கடன் மற்றும் மானியம் தருவதாக தற்போது 'தாட்கோ' நிர்வாகம் தெரிவிக்கிறது. இது விவசாயத்தை அழிக்க நினைக்கும் செயலாகும்.
'தாட்கோ' கடன் வழங்கும் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் மாட்டுப்பண்ணைக்கு கடன் மறுக்கப்படுகிறது. விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட பெரும்பான்மையான பட்டியலின மக்களின் உயர்வை தடுப்பதாக உள்ளது. பால் பண்ணை திட்டமும் இதனால் முடக்கப்பட்டு, இவர்கள் ேவறு தொழிலுக்கு மடை மாற்றம் செய்வதாக உள்ளது.
பிற மாவட்டங்களில் இக்கடன் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் மறுக்கப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேல், இந்நிறுவனம் முழுமையாகச் செயல்படாமல் உள்ளது. மேலும், கடனுக்கு விண்ணப்பிக்கவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும் ஒரு குறிப்பிட்ட கணினி மையத்தில் மட்டுமே அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இது போன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் கைவிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.