/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் சாரதா பள்ளியில் 'அச்சம் தவிர்' நிகழ்ச்சி
/
ஜெய் சாரதா பள்ளியில் 'அச்சம் தவிர்' நிகழ்ச்சி
ADDED : பிப் 02, 2025 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், 15, வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு குறித்த அச்சத்தைப் போக்குவதற்கான 'அச்சம் தவிர்' நிகழ்ச்சி நடந்தது.
தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் முன்னிலை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசுகையில், 'மாணவர்களின் வெற்றியும், சாதனையும் பெற்றோரைப் பெருமிதப்படுத்தும்' என்றார். முன்னதாக தமிழாசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி முதல்வர் மணிமலர் நன்றி கூறினார்.