/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோளம் சாகுபடியில் சாதியுங்க... பரிசுகளை வெல்லுங்க! விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அழைப்பு
/
மக்காச்சோளம் சாகுபடியில் சாதியுங்க... பரிசுகளை வெல்லுங்க! விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அழைப்பு
மக்காச்சோளம் சாகுபடியில் சாதியுங்க... பரிசுகளை வெல்லுங்க! விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அழைப்பு
மக்காச்சோளம் சாகுபடியில் சாதியுங்க... பரிசுகளை வெல்லுங்க! விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அழைப்பு
ADDED : நவ 16, 2025 12:37 AM

திருப்பூர்: விவசாய உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் நோக்கிலும், சிறந்த விவசாயிகளை அங்கீகரிக்கும் வகையில், மாநில அரசு, ஆண்டுதோறும் பயிர் விளைச்சல் போட்டியை நடத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, பயிர் விளைச்சல் போட்டிக்கு, மக்காச்சோள பயிர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 20 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
''மக்காச்சோள விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், திருப்பூர் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி யில் பங்கேற்று பரிசுத் தொகை பெறலாம்'' என, மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளார். இது அவர் வெளியிட்ட அறிக்கை:
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில், மாவட்ட அளவில் மக்காச்சோளம் பயிரில் அதிக உற்பத்தி பெறும் முதல் இரு விவசாயிகள், பரிசுத் தொகை பெற தேர்ந்தெடுக்கப்படுவர். இதில், முதல் பரிசாக, 10 ஆயிரம்; இரண்டாம் பரிசாக, 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க குறைந்தபட்சம், 2 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். நில உரிமைதாரர்கள் மட்டுமின்றி, குத்தகைதாரர்களும் பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்கும் தகுதி பெறுவர்.
பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு கட்டணமாக, 100 ரூபாய் சேர்த்து, சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனரிடம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்துடன் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள பரப்பின் சிட்டா, அடங்கல் மற்றும் நில வரைபடம் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

