/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீரிழிவு ரெட்டினோபதி: பார்வைக்கு ஆபத்து
/
நீரிழிவு ரெட்டினோபதி: பார்வைக்கு ஆபத்து
ADDED : நவ 16, 2025 12:38 AM

உ லக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு நேற்று திருப்பூரில், தி ஐ பவுண்டேசன் சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடந்தது. நீரிழிவு நோய் அதிகரிக்கும் கவலைக்குரிய நிலை, அதனால் கண் ஆரோக்கியத்திற்கான தீவிர தாக்கத்தையும் குறிப்பாக பார்வையிழப்பின் முக்கிய காரணமாக விளங்கும் நீரிழிவு ரெட்டினோபதி நோய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக அமைந்தது இப்பேரணி.
தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையில் இருந்து புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் வரை பேரணி நடந்தது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ரவி துவக்கி வைத்தார். மருத்துவமனை மேலாளர் அஸ்வின், குமரன் மகளிர் கல்லுாரி முதல்வர் வசந்தி, நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் கோமதி, கோமளவள்ளி, குமரன் கல்லுாரி மாணவியர், மருத்துவர், பணியாளர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
நீரிழிவு ரெட்டினோபதி என்பது, ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவு, கண் பின்புறத்தில் உள்ள ஒளியை உணரும் ரெட்டினா திசுக்களில் உள்ள சிறிய ரத்த நாளங்களை சேதப்படுத்தும் போது ஏற்படும் நோயாகும். ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. நோய் அதிகரிக்கும் போது மங்கிய பார்வை, கண் உள்ளே ரத்தக்கசிவு, ரெட்டினா பிரிவு மற்றும் சிகிச்சை இல்லாவிட்டால் நிரந்தர பார்வையிழப்பு போன்ற விளைவு ஏற்படுத்தும். சமீபத்திய ஆய்வுப்படி, ஒவ்வொரு மூன்று நீரிழிவு நோயாளிகளில் ஒருவருக்கு இந்நோயின் ஆரம்ப நிலை காணப்படுகிறது.
இது குறித்து, தி ஐ பவுண்டேஷன் தலைவர் டாக்டர் ராமமூர்த்தி கூறியதாவது:
நீரிழிவு நோய் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கிறது. ஆனால், கண் ஆரோக்கியத்திற்கான தாக்கம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. உண்மையில் நீரிழிவு ரெட்டினோபதியால் ஏற்படும் பார்வை இழப்பு, ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சையளிப்பதால் பெருமளவு தவிர்க்கக்கூடியது. இந்த பேரணி மற்றும் தொடர்புடைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக நேர்மையான கண் பரிசோதனை நல்ல நீரிழிவு கட்டுப்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம்.
உலக நீரிழிவு நோய் தின நிகழ்வின் ஒரு பகுதியாக, தி ஐ பவுண்டேஷன் வாரம் முழுதும் இலவச நீரிழிவு கண் பரிசோதனை முகாம்கள், கல்வி அமர்வுகள் நடத்துகிறது. இந்த முயற்சிகள், நீரிழிவு நோய் கண்களை எப்படி பாதிக்கிறது, பார்வையைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
கண்ணின் பார்வையை ஆபத்துக்குள்ளாக்கும் நோய்களை தடுக்கவும் சிறந்த சிகிச்சை வழங்கவும் மருத்துவமனை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

