/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட ஜூடோ போட்டி: சென்சுரி பள்ளி கலக்கல்
/
மாவட்ட ஜூடோ போட்டி: சென்சுரி பள்ளி கலக்கல்
ADDED : நவ 16, 2025 12:31 AM

திருப்பூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட ஜூடோ போட்டி, எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடந்தது. சென்சுரி பள்ளி மாணவர்கள் பங்கேற்று, அசத்தினர்.
பத்தொன்பது வயது, 50 - 55 கிலோ எடை பிரிவில், பிளஸ் 2 மாணவர் அருண் மைக்கேல் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். 45 - 50 கிலோ பிரிவில், பத்தாம் வகுப்பு மாணவர் சுஹால், 2 வது இடம் பெற்று, வெள்ளி வென்றார். முதலிடம் பெற்ற மாணவர் மாநில ஜூடோ போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
மாவட்ட குத்துச்சண்டை போட்டி, விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடந்தது. 17 வயது மாணவியர், 42 - 44 கிலோ பிரிவில், வேதிகா முதலிடம்; தங்கம். 48 - 50 கிலோ பிரிவு, தியாஸ்ரீ, 2வது இடம், வெள்ளி, 14 வயது, 46 - 48 கிலோ பிரிவில், கர்ணிகா முதலிடம், தங்கம் வென்றனர். முதலிடம் பெற்ற மாணவியர் இருவரும் மாநில குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். மாவட்ட போட்டியில் வெற்றி மாணவ, மாணவியர், பயிற்சியாளர் கார்த்திக் பிரசாத் ஆகியோரை தாளாளர் சக்திதேவி, முதல்வர் ெஹப்சிபாபால் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

