/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி விளையாட்டு விழா
/
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி விளையாட்டு விழா
ADDED : நவ 16, 2025 12:31 AM

திருப்பூர்: திருப்பூர், அம்மாபாளையம், ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில், 14 ம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி அறங்காவலர் நடராஜன் கவுரவ விருந்தினராக பங்கேற்று, தேசிய கொடியேற்றினார். பத்மஸ்ரீ விருது பெற்ற கூடைப்பந்து வீராங்கனை அனிதாபால்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஒலிம்பிக் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் ராஜேந்திரபிரசாத் வரவேற்றார். பள்ளி இயக்குனர் ஜனபாரதி, செயலர்கள் தினகரன், அஸ்வத், துணை முதல்வர் பிரேமலதா முன்னிலை வகித்தனர்.
பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்ற வீரர், வீராங்கனையர் ஒலிம்பிக் தீபம் ஏற்றினர். மாணவியர் தலைவி சஷ்டிகா உறுதிமொழி வாசித்தார். இசை, நடனம், யோகா, கராத்தே, சிலம்பம், ஸ்கேட்டிங் நடத்தப்பட்டது. 'டிரில் டிஸ்பிளே' வை தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டுத்துறை மாணவியர் தலைவி நிஹாரிகா நன்றி கூறினார்.

