/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சங்கமம் கலைக்குழு 109வது அரங்கேற்றம்
/
சங்கமம் கலைக்குழு 109வது அரங்கேற்றம்
ADDED : நவ 16, 2025 12:24 AM

அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலுார் ஊராட்சி காமநாயக்கன்பாளையத்தில் சங்கமம் கலைக்குழுவினரின் 109வது ஒயிலாட்டம், 15வது வள்ளி கும்மி மற்றும் 11வது கம்பத்தாட்டம், ஆகிய முப்பெரும் அரங்கேற்ற விழா நடைபெற்றது.
விழாவில், இயற்கை வேளாண் விஞ்ஞானி மயில்சாமி கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசினார். வள்ளி கும்மி ஆசிரியர் செல்லப்ப கவுண்டர், துணை பயிற்சியாளர்கள் தமிழரசன், தருண்பாபு, ராதாமணி,கோமதி, ரம்யா, ரேணுகா மற்றும் இசை கலைஞர்கள் சிவசக்தி சண்முகம், சிவகுகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சங்கமம் கலைக்குழு நிறுவனர் கனகராஜ் கூறுகையில், ''தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான ஒயிலாட்ட கலையை பல்வேறு விழாக்களில் நடத்தி வருகிறோம். தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் விதமாக பழமைகள் அழியாமலும், நாட்டுப்புற கலைகளை காக்கும் விதத்திலும் அனைத்து மக்களுக்கும் எளிதில் புரியும்படி நடத்துகிறோம்,'' என்றார்.

